பிரபல நடிகையின் இடுப்பை தொட்ட இளைஞர்.. அநாகரீகத்தின் உச்சம்.. சர்ச்சையான வீடியோ

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரகாசமான நடிகை. இவர் சமீபத்தில் ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த நடிகையிடம் ரசிகர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு சினிமா வட்டாரத்தை சேர்ந்த நடிகைகள் கண்டனங்கள் எழுந்துள்ளன.

திரையுலகில் நடிகை முதல் துணை நடிகைகள் வரை பாலியல் ரீதியான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அதனையும் தாண்டி நடிகைகள் பொது இடங்களுக்கு செல்லும்போதோ அல்லது கடை திறப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் போது எதிர்பாராதவிதமாக பாலியல் ரீதியான பிரச்னைகளில் சிக்கி விடுகின்றனர். ரசிகர்கள் சிலர் நடிகைகளிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது. இதனால், பொறுமை இழக்கும் நடிகைகள் பொது இடம் என்றும் பாராமல் கோபத்தை காட்டுகின்றனர். நடிகை என்பதை தாண்டி பெண்ணாக பார்க்க மாட்டீர்களா என்றும் ஆதங்கப்படுவதும் உண்டு. இந்நிலையில், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான ஒருவரிடம் ரசிகர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

young-man-puts-his-hand-on-actress-manju-warriers-waist

மனசிலாயோ வெற்றி: மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டன. இப்படத்தில் நடிக்கும்போது தமிழில் நன்றாக பேசியதை பார்த்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் வியந்து பார்த்தார்கள். பின்னர், நான் நாகர்கோயில் பொண்ணுதான் என்று அசர வைத்தார் மஞ்சு வாரியர். மேலும், அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து துணிவு, வேட்டையன், விடுதலை 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட மஞ்சு வாரியர், மனசிலாயோ பாடலுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்தப் படமே நான் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒன்று என தெரிவித்திருந்தார்.

நடிகையிடம் அநாகரீகம்: விடுதலை 2 படத்திற்கு பிறகு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மஞ்சு வாரியர், ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மஞ்சு வாரியர் ஷாப்பிங் மால் திறப்பு விழா ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவரை காண ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அப்போது மஞ்சு வாரியர் தனது காரில் இருந்தபடியே ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். அப்போது, ஒரு நபர் மஞ்சு வாரியரின் இடுப்பில் கை வைத்து விட்டார். இதனால், நிலைகுலைந்து போன மஞ்சு வாரியர் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றார்.

கண்டனம்: பின்னர் கூட்டத்தின் நடுவே பதற்றமடைந்த மஞ்சு வாரியர் கை வைத்த அந்த நபரை தேடியுள்ளார். அவரை காணவில்லை. பின்னர் அங்கிருந்து மஞ்சு வாரியர் கிளம்பி செல்கிறார். தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சக நடிகைகள், திரை பிரபலங்கள் ஒரு பெண்ணிடம் பொது இடத்தில் இப்படித்தான் அநாகரீகமாக நடந்துகொள்வீர்களா? நடிகை என்றால் இளக்காரமா என சமூகவலைதளங்களில் பதிவிட்டு கோபத்தை தெரிவித்து வருகின்றனர். முறையான பாதுகாப்பு அந்த இடத்தில் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X