பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூலாம் இப்ப காப்பாத்தாது..சர்ச்சை நடிகை என்ன சொல்றார் பாருங்க!
சென்னை: நடிகை ஶ்ரீரெட்டி வெளியிட்டுள்ள புதிய பதிவை நெட்டிசன்ஸ் சரமாரியாக விளாசி யுள்ளனர்.
வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஶ்ரீரெட்டி.
இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.

பாலியல் புகார்கள்
தெலுங்கு சினிமாவில் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

அதிரடி புகார்
பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவியையும் அவரது குடும்பத்தினரையும் பற்றி அதிரடியாக புகார் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஶ்ரீரெட்டி, பவன் கல்யாணை பற்றியும் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இந்நிலையில் பேஸ்புக் லைவில் தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணிக்கு மிரட்டல் விடுத்ததாக சைபர் கிரைம் போலீசார், ஶ்ரீரெட்டி மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

சர்ச்சை கருத்து
இதையடுத்து அவர்கள் மீதும் ஶ்ரீரெட்டி புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுவார். இதற்கு ரசிகர்களும் ஆபாசமாக அவரை வசைபாடுவார்கள். பச்சைப் பச்சையாகத் திட்டுவார்கள். அதை அவர் கண்டு கொள்வதில்லை.

மாஸ்க் மட்டுமே
இந்நிலையில் இப்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அதுகுறித்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் என விலையுயர்ந்த ஆடம்பர கார்களோ, அல்லது பணமோ உங்களைக் காப்பாற்றாது, இப்போது. விலை குறைந்த மாஸ்க் மட்டுமே காப்பாற்றும் என்று கூறியுள்ளார்.

நீங்கம் வச்சிருக்கீங்களே?
இதையடுத்து சில நெட்டிசன்ஸ் அவரை விளாசியுள்ளனர். அதாவது, இது உங்களுக்கும் சேர்த்துதானே. நீங்களும் ஆடி கார் வச்சிருக்கீங்களே? என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், உங்க ஆடியை தூக்கி வீசிட்டு, நானோ வாங்கிக்கிறீங்களா? என்றும் உங்கள் கருத்து சூப்பர் என்றும் சிலர் அவரை பாராட்டியும் உள்ளனர். சிலர் ஆபாசமாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











