twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு... வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஹைகோர்ட்டில் யுக்தாமுகி மனு

    |

    மும்பை: முன்னாள் உலக அழகி யுக்தா முகிக்கும், அவரது கணவர் பிரின்ஸ் டுலிக்கும் இடையே பேச்சுவார்த்தையின் மூலம் சமரச உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இருவரும் தங்கள் மீது தொடரப் பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    முன்னாள் உலக அழகி யுக்தாமுகி. இவருக்கு பிரின்ஸ் டுலி என்பவருடன் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது நான்கு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான்.

    இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் தன் கணவர் பிரின்ஸ் டுலி மற்றும் பிரின்ஸ் டுலியின் தாயார், தந்தை மற்றும் சகோதரி ஆகியோருக்கு எதிராக போலீசில் புகார் ஒன்றை அளித்தார் யுக்தா முகி.

    அதில் இயற்கைக்கு மாறாக தன் கணவர் உடலுறவு கொள்ள வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார் யுக்தாமுகி. மேலும், கணவரின் பெற்றோர் தன்னை துன்புறுத்துவதாகவும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.

    முன்ஜாமீன்...

    முன்ஜாமீன்...

    யுக்தாமுகியின் புகாரைத் தொடர்ந்து பிரின்ஸ் டுலியும் அவரது பெற்றோரும் முன்ஜாமீன் வேண்டி கீழ்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், பிரின்ஸ் டுலியின் பெற்றோருக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

    மேல்முறையீடு...

    மேல்முறையீடு...

    தனக்கு முன்ஜாமீன் மறுக்கப் பட்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மும்பை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் பிரின்ஸ்.

    பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு...

    பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு...

    இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுதாரர் (பிரின்ஸ்) மற்றும் அவரது மனைவி (யுக்தா முகி) ஆகிய இருவரும் தங்களுக்குள் பேசி, சமரச உடன்பாடு ஏற்பட நீதிபதி வாய்ப்பளித்தார்.

    சமரசம்...

    சமரசம்...

    நீதிமன்ற உத்தரவின் பேரில் நடந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இருவரும் சுமூகமாகப் பிரிவதாக முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து பிரின்ஸுக்கு ஜாமீன் வழங்கப் பட்டது.

    ரத்து செய்யக் கோரி...

    ரத்து செய்யக் கோரி...

    பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடையடுத்து இருவரும் வழக்குகளை வாபஸ் பெறுவது என முடிவெடுத்தனர். அதன்படி, வெவ்வேறு நீதிமன்றங்களில் தொடரப் பட்டுள்ள தங்களது வழக்கை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

    ஒத்தி வைப்பு...

    ஒத்தி வைப்பு...

    மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.எச்.பாட்டீல் மற்றும் அனுஜா பிரபுதேசாய் ஆகியோர், இந்த வழக்கு கோடை விடுமுறை முடிந்ததும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று கூறி ஒத்தி வைத்தனர்.

    புதிய மனு...

    புதிய மனு...

    இதற்கிடையே கடந்த மே மாதம் விவாகரத்து வேண்டி வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார் பிரின்ஸ். அது தொடர்பாக தற்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்யும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    Former Miss World Yukta Mookhey and her estranged husband, Prince Tuli, have approached the high court seeking quashing of cases filed against each other in various courts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X