வீரம் பட சிறுமியை நியாபகம் இருக்கா?.. அட ஹீரோயினாக மாறிட்டாங்களே.. சூப்பர் போங்க

சென்னை: அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் யுவினா. இப்போது அவர் ரைட் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படமாக ரைட் உருவாகியிருக்கிறது.

அஜித்தின் கரியரில் வீரம் படத்துக்கு முக்கியமான இடம் உண்டு. அதற்கு முன்னதாக தொடர்ந்து கோட் சூட் அணிந்து நடித்துவந்த அவர் வீரம் படத்தில்தான் பல வருடங்களுக்கு வேட்டி சட்டை கட்டி நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. போட்டியாக களமிறங்கிய விஜய்யின் ஜில்லா படத்தைவிடவும் வீரம் படம் பாசிட்டிவ் விமர்சனங்களைத்தான் அப்போதைக்கு பெற்றது. அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் யுவினா.

ஹீரோயின் யுவினா: அந்த வயதிலேயே பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்திய அவர் இப்போது ஹீரோயினாக நடிக்க தொடங்கியிருக்கிறார். ரைட் என்ற படத்தில்தன் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அவர். சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தி RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா ஆகியோர் இப்படத்தை தயாரித்திருக்கின்றனர்.

Yuvina who played a child artist in the film Veeram has made her debut as a heroine in the film Right

எப்போது ரிலீஸ்?: வரும் செப்டம்பர் 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் ட்ரெய்லரும் பாடல்களும் வெளியிடப்பட்டன. விழாவில் பேசிய தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன், " எங்கள் படத்தில் பணிபுரிந்த நட்டி சார், அருண் பாண்டியன் சார் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்த உறவுகளுக்கு நட்புகளுக்கும் நன்றி. இயக்குநர் எனது நண்பர், இன்னொரு நண்பர் ஜெயபாண்டி சார். அவர் மூலம் தான் இந்தப்படம் நடந்தது.

சுப்பிரமணியன் படம் செய்ய வேண்டும் என்று சொன்னபோது மூவரும் இணைந்து செய்யலாம் என்று தான் படம் ஆரம்பித்தோம். அருண்பாண்டியன் சார் பல வழிகாட்டுதல்களை தந்தார். நட்டி சார் முழுக்க முழுக்க கூட இருந்து ஆதரவு தந்தார். இயக்குநர் ஜெயித்தால் எங்கள் ஊரே சந்தோசப்படும். அனைவரும் திரையரங்கு வந்து படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி" என்று குறிப்பிட்டார்.

யுவினா பேச்சு: அவரைத் தொடர்ந்து நடிகை யுவினா பேசுகையில், " மீடியா நண்பர்களுக்கு வணக்கம், சின்ன குழந்தையாக என்னை படத்தில் பார்த்திருப்பீர்கள். இப்போ காலேஜ் பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளேன். இந்த வயது பாத்திரம் நடிக்கலாம் என ஆரம்பித்தபோது இப்படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. எனக்கு இந்த வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நட்டி சாருக்கு நன்றி. எங்கள் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X