கண்ட இடத்தில் கை வைத்த நபர்களை அடித்து நொறுக்கிய நடிகை
Recommended Video

அவுரங்காபாத்: கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஜரீன் கானிடம் சிலர் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கடை ஒன்றை திறந்து வைக்க சென்றார் பாலிவுட் நடிகை ஜரீன் கான். அவர் வருவது குறித்து அறிந்து கடை முன்பு பெரும் கூட்டம் கூடியிருந்தது.
கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு ஜரீன் தனது காரில் ஏற சென்றுள்ளார். அப்பொழுது கடை முன்பு கூடியிருந்த கூட்டத்தில் சிக்கிக் கொண்டார் அவர். சிலர் அவர் மீது கை வைத்ததுடன் கண்ட இடத்தில் தொட முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜரீன் கான் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர்களை பிடித்து தள்ளியதுடன், சிலரை அடித்துவிட்டார். ஒரு நடிகை இந்த அளவுக்கு வேகத்துடன் தாக்கியதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர்கள் மிரண்டுவிட்டனர்.
சில்மிஷம் செய்ய முயன்றவர்களை அடித்துவிட்டு ஒரு வழியாக தனது காரில் ஏறி சென்றார் ஜரீன் கான். இந்த சம்பவம் குறித்து அவர் ட்விட்டரிலும் தெரிவித்துள்ளார். துணிச்சலாக நடந்து கொண்டதை பார்த்து ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











