நயன்தாரா ரூட்டில் பிரியா பவானி சங்கர்?.. புரமோஷனுக்கு கூப்பிட்டா இத்தனை லட்சம் செலவாகுமா? புலம்பல்!

சென்னை: சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சத்யதேவ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜீப்ரா படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகை பிரியா பவானி சங்கர் வராதது குறித்து படத்தின் தயாரிப்பாளர் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜீப்ரா படம் முதல் நாளில் பெரிதாக வசூல் செய்யாத நிலையில், அந்த படத்தை பார்த்துவிட்டு குவிந்த விமர்சனங்கள் காரணமாக தற்போது தியேட்டர்களில் படம் சூடு பிடித்திருக்கிறது.

புதிய படத்தில் ஹீரோயினை கமிட் செய்யும் போதே புரமோஷனுக்கு வருவார்களா? இல்லையா? என்பதை எல்லாம் தெளிவாக அக்ரீமெண்ட் போட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என படக்குழு நேற்று நடைபெற்ற சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பேசியுள்ளனர்.

priya bhavani shankar nayanthara heroine

நாயகன் சத்யதேவ் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் புரமோஷனுக்கு வருகை தந்த நிலையில், பிரியா பவானி சங்கர் புரமோஷனுக்கு வராத நிலையில், அவரைத் தான் சொல்றீங்க்ளா என்கிற கேள்வி எழுப்பிய நிலையில், வெளிநாட்டில் இருக்கும் அவரை புரமோஷனுக்கு அழைத்தால் பல லட்சம் செலவாகும் என்றும் அவருக்கும் அவரது குழுவுக்கும் விமான டிக்கெட்டுகள் உள்ளிட்ட ஏகப்பட்ட செலவுகள் இருப்பதாகவும் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

நயன்தாரா போலவே: நடிகர் ரஜினிகாந்த் இந்த வயதிலும் தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களின் இல்லத்தில் நடக்கும் நல்லது கெட்டது என அனைத்துக்கும் சென்று வருகிறார். ஆனால், லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தனது தயாரிப்பு படங்களைத் தவிர மற்ற தயாரிப்பு நிறுவனங்களில் தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே செல்வதில்லை. தற்போது அதே பாணியை பிரியா பவானி சங்கர் எடுத்துள்ளாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

வசூல் வேட்டை நடத்தும் ஜீப்ரா: எஸ்.என். ரெட்டி தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், சத்யராஜ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த வாரம் வெளியான ஜீப்ரா திரைப்படம் முதல் நாளில் வெறும் 4 லட்சம் மட்டுமே வசூல் செய்தது. ஆனால், பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக அடுத்த நாளே 55 லட்சம் வசூலையும் அதற்கு அடுத்த நாள் வசூலை சேர்த்து இதுவரை 1 கோடி ரூபாய் வசூலை அந்தப் படம் கடந்துள்ளது. 2வது வார முடிவில் மேலும், வசூலை அள்ளும் என படக்குழு எதிர்பார்ப்பதால் சக்சஸ் மீட் உள்ளிட்ட புரமோஷன் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

priya bhavani shankar nayanthara heroine

பிரியா பவானி சங்கர் மீது குற்றச்சாட்டு: நேற்று சென்னையில் நடைபெற்ற ஜீப்ரா படத்தின் சக்சஸ் மீட் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பிரியா பவானி சங்கர் வராததை மறைமுகமாக படக்குழு தாக்கி பேசிய நிலையில், பத்திரிகையாளர்கள் நேரடியாகவே பிரியா பவானி சங்கர் பெயரை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய நிலையில், அவர் வரமாட்டேன் என சொல்லவில்லை. அவரை அழைத்தால் ஏற்படும் செலவுக்கு பதில் அந்த பணத்தை புரமோஷனுக்கு செலவழித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

இத்தனை லட்சம் செலவாகுதா?: வெளிநாட்டில் இருக்கும் பிரியா பவானி சங்கரை டிக்கெட் போட்டு இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தால் அவரை மட்டும் அழைக்க முடியாது. அவரது டீமையே அழைக்க வேண்டும். அதற்கு 20 முதல் 25 லட்சம் வரை செலவாகிவிடும் என வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும், இந்த தொகுப்பாளர் தான் தன்னை கேள்விக் கேட்க வேண்டும் என்றும் இந்த யூடியூப் சேனலுக்குத்தான் பேட்டிக் கொடுப்பேன் என்றெல்லாம் டிமாண்ட் வைப்பது நியாயம் கிடையாது என்றும் மீண்டும் பிரியா பவானி சங்கரை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். இந்த ஆண்டு பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரத்னம், இந்தியன் 2, டிமான்ட்டி காலனி 2, பிளாக் மற்றும் ஜீப்ரா என இதுவரை 5 படங்கள் வெளியாகி உள்ளன. கைவசம் பல பட வாய்ப்புகள் இருப்பதால் பிரியா பவானி சங்கர் பட புரமோஷன்களை தவிர்க்கிறாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X