அஞ்சாத பாண்ட் கேர்ள் ஓல்கா

By Staff

Olga Kurylenko
புதிய பாண்ட் ஹீரோயின் ஓல்கா குரிலென்கோ படு தில் பார்ட்டியாக இருக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்ததற்காக தனது உக்ரைன் பலவிதங்களில் தன்னை விமர்சித்தாலும் அதுகுறித்து சற்றும் கவலைப்படாமல் என் இஷ்டப்படிதான் நடிப்பேன் என்கிறார் துணிச்சலாக.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் ஓல்கா. ஏராளமான படங்களில் நடித்துள்ள ஓல்கா, படு தில்லானவராக இருக்கிறார். பல பிரெஞ்சு படங்களில் தலை, உடல் காட்டியுள்ளார். ஒரு படத்தில், முழு நீள கவர்ச்சி காட்டியும் அசத்தியவர்.

இருமுறை கல்யாணம் செய்து கொண்டு இருவரையும் கழற்றியும் விட்டவர்.

புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான 'குவாண்டம் ஆப் சொலஸில்' இவர்தான் ஜேம்ஸின் காதலியாக வருகிறார்.

படத்தில் காதலும், கவர்ச்சியும், நீக்கமற இருக்கிறதாம். இதுகுறித்து உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியினர் வித்தியாசமான முறையில் ஓல்காவை விமர்சித்துள்ளனர். இங்கிலாந்துக்காரரான ஜேம்ஸ் பாண்ட்டுடன் கவர்ச்சி காட்டியும், உடலைக் காட்டியும் நடித்துள்ள ஓல்கா நாட்டுக்கு துரோகம் இழைத்து விட்டார்.

அவர் ஜேம்ஸ் பாண்ட்டிடம் உடலைக் காட்டியிருப்பது, மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் நாட்டை சோரம் போக செய்வதற்கு சமம் என்று குண்டக்க மண்டக்க விமர்சிக்கிறார்களாம்.

ஆனால் இதையெல்லாம் ஓல்கா சற்றும் பொருட்படுத்தவில்லை. இதெல்லாம் சும்மா. நான் ஒரு நடிகை. எனது இஷ்டப்படிதான் நடிப்பேன் என்கிறார் படு போல்டாக.

குவாண்டம் ஆப் சொலஸில் எப்படி நடித்துள்ளீர்கள் என்று கேட்டபோது, வழக்கமான பாண்ட் கேர்ள்தான். இருப்பினும் இந்தப் படத்தில் பாண்ட் கேர்ள் முற்றிலும் அதிரடியான கேரக்டராக உருவாக்கப்பட்டிருக்கிறது. சுயம் நிறைந்த பெண்ணாக இதில் பாண்ட் கேர்ள் வருகிறார்.

அழகோடும், உறுதியான மனதுடனும் மட்டுமல்லாமல் தனித்துவம் வாய்ந்த பெண்ணாகவும் பாண்ட் கேர்ள் கேரக்டர் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பொம்பளை பாண்ட் என்று சொல்லலாம் என்கிறார் ஓல்கா.

கெமிலி என்ற கேரக்டரில் இதில் நடித்துள்ளார் ஓல்கா. இந்த கேரக்டர் மிகவும் சவாலுக்குரியதாக இருந்ததாகவும், ரசித்து நடித்திருப்பதாகவும், டூப் போடாமல் அனைத்துக் காட்சிகளிலும் தானே நடித்திருப்பதாகவும் கூறுகிறார் ஓல்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X