மருத்துவமனையில் எலிசபெத் டெய்லர்!

முன்னாள் கனவுக் கன்னியான எலிசபெத்துக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். 76 வயதாகும் டெய்லர், விவாகரத்துக்கு புகழ் பெற்றவர். ஒவ்வொரு கணவரையும் அவர் விவாகரத்து செய்த வேகம் உலகப் பிரசித்தி பெற்றது.
லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள பெல் ஏர் பகுதியில் வசித்து வரும் டெய்லர், 55க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் மிகவும் புகழ் பெற்ற படம் கிளியோபாட்ரா.
நான்கு குழந்தைளுக்கு தாயான டெய்லர், 8 முறை திருமணம் செய்து எட்டு முறை விவாகரத்தும் செய்தவர்.
தற்போது இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள எலிசபெத் டெய்லர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அவருக்கு நிமோனியா காய்ச்சலும் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எலிசபெத் டெய்லர் கவலைக்கிடமாக இல்லை என்றும் அதுதொடர்பான செய்திகள் தவறு என்றும் டெய்லரின் செய்தித் தொடர்பாளர் டிக் குட்மேன் வெளியிட்ட அறிக்கையில், எலிசபெத் டெய்லர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் பத்திரிக்கைளில் வெளியாகியுள்ளது போல அவர் கவலைக்கிடமாக இல்லை. அவர் விரைவில் வீடு திரும்புவார்.
டெய்லருடன் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் உள்ளனர் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











