வங்கியைக் கொள்ளையடிக்க முயன்றதாக ஹாலிவுட் நடிகர் கைது

பகழ்பெற்ற எம்மி விருது பெற்றவர் ரிப் டார்ன். அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் சாலிஸ்பரி வங்கி ஒன்றில் குடிபோதையில் கையில் ஆயுதத்துடன் நுழைந்து விட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
78 வயதான டார்ன், சாலிஸ்பரி நகரில்தான் வசித்து வருகிறார். அவர் அளவுக்கு அதிகமாக குடித்த நிலையில் கையில் துப்பாக்கியுடன் வங்கியில் இருந்தாராம்.
அவர் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாகவும், ஆயுதம் வைத்து இருந்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் 1992ம் ஆண்டு வெளியான 'தி லாரி சாண்டர்ஸ் ஷோ' படத்தில் நடித்ததற்காக எம்மி விருது பெற்றவர்.
1983ம் ஆண்டு வெளியான கிராஸ் கிரீக் என்ற படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.


Click it and Unblock the Notifications











