ஜெஸிகாவுக்கு கிட்னி கோளாறு

பாப் இளவரசிகளில் ஒருவரான 27 வயது ஜெஸிகா, தனது காந்தக் குரலால் பலரையும் வசீகரித்து வைத்திருப்பவர்.
சமீபத்தில் ஈராக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ட்ரிப் டு ஈராக் எனும் பெயரில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
அங்கு ஈராக் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுவரும் அமெரிக்கப் படைகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் ராணுவ முகாம்களில் பாடினார் ஜெஸிகா.
ஒரு புதிய இசை ஆல்பம் வெளியிடும் பணிகளில் தீவிரமாக இருந்த அவருக்கு திடீரென சிறுநீரகங்களில் நோய்த் தொற்று ஏற்பட்டது.
உடனடியாக அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் செடார்ஸ் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இப்போது அவர் நலமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சியர் அப் ஜெஸிகா!
Comments


Click it and Unblock the Notifications