பாக்ஸின் வாழைப்பழ டிரஸ்!

ஹாலிவுட்டின் கவர்ச்சி தாரகை மேகான் பாக்ஸ். இவரைப் பார்த்து ஏஞ்செலீனா ஜூலியே சற்று பொறாமையுடன் தான் உள்ளார்.
செக்ஸ் சிம்பலாக வலம் வந்து கொண்டுள்ள பாக்ஸ் தனது கடந்த காலத்தை சற்றே மனம் திறந்து கூறியுள்ளார்.
23 வயது இளம் புயல் பாக்ஸ் அதுகுறித்துக் கூறுகையில், நான் ஒரு 'ஸ்மூத்தி கஃபே'யில் (ஐஸ்கிரீம், ஸ்னாக்ஸ், பீட்ஸா உள்ளிட்டவை விற்கும் இடம்) முன்பு வேலை பார்த்தபோது, அங்கு கடையைப் பிரபலப்படுத்துவதற்காக நான் உள்ளிட்ட ஊழியர்கள் வித்தியாசமான உடையில் வர வேண்டும் எனக் கூறினர்.
என்னிடம் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் போல டிரஸ் போட்டுக் கொண்டு வருமாறு கூறினர். நான் வாழைப்பழத்தை தேர்வு செய்து, அதேபோல உடை அணிந்து பணியில் ஈடுபட்டேன் என்கிறார் சிரித்தபடி.
அது ஏன் ஆப்பிளை விட்டுட்டீங்க என்று கேட்டால், ஆப்பிள் சற்று பெரிதாக இருக்கும். வாழைப்பழமாதான் மெல்லியதாக இருக்கும். எனவேதான் அதை தேர்வு செய்தேன் என்கிறார் பாக்ஸ்.
உங்க அழகுக்கு என்ன ரகசியம் என்றால், ஹலோ, நான் இப்போதுதான் இவ்வளவு அழகாக இருக்கிறேன். முன்பெல்லாம் இப்படி இருக்க மாடடேன். எப்போதுமே நான் கவர்ச்சிகரமாக இருந்ததில்லை. ஆனால் நான் கவர்ச்சிகரமாக இருப்பதாக இப்போதுதான் நிறையப் பேர் கூறுகிறார்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











