கோகைனா? சூயிங் கம் என்று தானே நினைத்தேன்: பாரிஸ் ஹில்டன்

போதைப்பொருள் இருந்த சிறிய பை கீழே விழுந்ததையடுத்து காவலர் ஒருவர் 29 வயது ஹில்டனிடம் பர்ஸைக் கொடுத்துள்ளார் என்று போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. அந்த பையை பார்க்கவே இல்லை என்று கூறிய ஹில்டன், தற்போது கோகைனை சூயிங் கம் என்று நினைத்ததாகக் கூறியிருக்கிறார். இவ்வாறு காவலர் ஒருவர் தெரிவித்தார்.
0.8 கிராம் கோகைன் வைத்திருந்தது குற்றச் செயலாகும். இது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கக்கூடும். பர்ஸில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கோகைன் என்னுடையதல்ல. மேலும், அந்த பர்ஸை என் தோழி ஒருவரிடம் இருந்து இரவல் வாங்கினேன் என்று ஹில்டன் தெரிவித்தார்.
கையில் எது கிடைத்தாலும் மென்று துப்பி விடுவார் போல பாரிஸ்.. !
Comments


Click it and Unblock the Notifications