twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோகைனா? சூயிங் கம் என்று தானே நினைத்தேன்: பாரிஸ் ஹில்டன்

    By Sudha
    |

    Paris Hilton
    லண்டன்: கவர்ச்சிக் கன்னி பாரிஸ் ஹில்டன் கோகைன் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக கூறி அன்மையில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போதைப்பொருள் இருந்த பர்ஸ் தன்னுடையதில்லை என்றும், கோகைனை சூயிங் கம் என்று தெரியாமல் நினைத்து விட்டதாகவும் பலே பல்டி அடித்துள்ளார்.

    போதைப்பொருள் இருந்த சிறிய பை கீழே விழுந்ததையடுத்து காவலர் ஒருவர் 29 வயது ஹில்டனிடம் பர்ஸைக் கொடுத்துள்ளார் என்று போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது. அந்த பையை பார்க்கவே இல்லை என்று கூறிய ஹில்டன், தற்போது கோகைனை சூயிங் கம் என்று நினைத்ததாகக் கூறியிருக்கிறார். இவ்வாறு காவலர் ஒருவர் தெரிவித்தார்.

    0.8 கிராம் கோகைன் வைத்திருந்தது குற்றச் செயலாகும். இது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கக்கூடும். பர்ஸில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கோகைன் என்னுடையதல்ல. மேலும், அந்த பர்ஸை என் தோழி ஒருவரிடம் இருந்து இரவல் வாங்கினேன் என்று ஹில்டன் தெரிவித்தார்.

    கையில் எது கிடைத்தாலும் மென்று துப்பி விடுவார் போல பாரிஸ்.. !

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X