அவதார்... 2 பில்லியனை தாண்டி புதிய சாதனை!

உலக சினிமா சரித்திரத்தில் 2 பில்லியன் டாலர் எனும் அளவை இதுவரை எந்தப் படமும் எட்டியதில்லை.
இதற்கு முன் வெளியான கேமரூனின் டைட்டானிக் மட்டுமே 1.8 பில்லியன் அளவு வசூலித்து முதலிடத்தில் இருந்தது.
12 ஆண்டுகள் அந்தப் படம் வைத்திருந்த சாதனையை, இன்று அதே இயக்குநரின் அவதார் உடைத்தது. கடந்த வாரம் டைட்டானிக்கின் சாதனையை முறியடித்த அவதார், இந்த வாரம் 2 பில்லியன் டாலரைத் தாண்டி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'இந்த சாதனையை முறியடிக்கும் படத்தைக் காண இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ' என்று பிரமித்துப் போய் எழுதியுள்ளது ஹாலிவுட் இணையளம்.
ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி இந்தப் படத்தின் இந்த வார வசூல் மட்டும் 31 மில்லியன் டாலர்கள். இன்னும் முதல் மூன்று இடங்களில் மாறி மாறி தொடர்கிறது அவதார்.
வசூலில் மட்டும் அல்லாமல், ஆஸ்கார் விருதுகளை அள்ளிச் செல்வதிலும் அவதார் படம் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று நம்பப்படுகிறது.
டைட்டானிக் படம் 14 விருதுகளுக்கு நியமனம் பெற்றது. 11 ஆஸ்கார் விருதுகள் பெற்றது. இதுவரை அவதார் படம் 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











