'பேரழகி' கேட் ஹட்சன்!

By Staff

Kate Hudson
உலகிலேயே மிகவும் அழகான பெண்ணாக பீப்பிள் பத்திரிக்கை, நடிகை கேட் ஹட்சனை தேர்வு செய்துள்ளது.

பீப்பிள் இதழ், உலகின் மிகவும் அழகான பெண்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் கேட் ஹட்சனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

29 வயதாகும் கேட் ஹட்சன் உண்மையிலேயே பேரழகுக்குச் சொந்தக்காரர்தான். ஹாலிவுட்டின் அழகுச் சிலைகளில் கேட்டும் ஒருவர்.

பீப்பிள் இதழ் தன்னை உலகிலேயே பேரழகு கொண்ட பெண்ணாகத் தேர்வு செய்திருப்பது குறித்து கேட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எனது சிறு வயதில் நான் சந்தோஷமாக இருந்ததில்லை. எனக்கு மூன்று சகோதரர்கள். அவர்களுக்குத்தான் வீட்டில் அதிக செல்லம். என்னை உதாசீனப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இன்று நான் உலகின் பேரழகுப் பெண் என்ற பெருமையை எட்டியுள்ளது என்னை கெளரவப்படுத்துவதாக உள்ளது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கேட்.

இந்தப் பட்டியலில் வேறு சில ஹாலிவுட் நட்சத்திரங்களும் வேறு சில பிரிவுகளின் கீழ் வந்துள்ளனர்.

ஈவா லோங்கோரியா - டோனி பார்க்கர், முழுமையான தம்பதிகள் என்ற பெயரைப் பெற்றுள்ளனர்.

ஏஞ்செலினா ஜூலி - பிராட் பிட்டுக்கு ஹால் ஆப் பார்மர்ஸ் என்ற
பெருமை கிடைத்துள்ளது.

அழகிய பெண்களின் பட்டியலுடன் கூடிய பீப்பிள் இதழ் இன்று முதல் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X