மரியா, நிக் ரகசியத் திருமணம்

பிரபல பாப் பாடகர்கள்தான் மரியாவும், நிக்கும். மரியாவுக்கு கடந்த 1993ம் ஆண்டு முதல் கல்யாணம் நடந்தது. இசைத் தட்டு நிறுவனத்தைச் சேர்ந்த டோமி மோட்டாலோவாவைக் கல்யாணம் செய்தார் மரியா. ஆனால் இந்தக் கல்யாணம் ஐந்து ஆண்டுகளுக்குத்தான் நீடித்தது. 98ல் டைவர்ஸ் வாங்கி விட்டார் மரியா.
அதன் பிறகு தற்போது நிக் கேனானைக் கல்யாணம் செய்துள்ளார். மரியாவுக்கு இது 2வது கல்யாணம். ஆனால் கேனானுக்கு இதுதான் முதல் கல்யாணம்.
இருப்பினும் கடந்த ஆண்டு மாடல் அவகி செலிடா இபாங்ஸுடன் நிக்குக்கு நிச்சயதார்த்தம் ஆனது. ஆனால் அது கல்யாணத்தில் முடியவில்லை. அப்படியே கேன்சலாகிப் போனது.
இந்த நிலையில் சமீபத்தில் மரியாவுக்கும் நிக்குக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அதற்கு அடுத்த ஓரிரு நாட்களிலேயே ,அதாவது புதன்கிழமை ரகசியமாக திருமணத்தையும் முடித்துக் கொண்டு விட்டனராம்.
மிக மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்தக் கல்யாணத்தில் கலந்து கொண்டனராம்.
இருப்பினும் திருமணச் செய்தியை மரியாவும், நிக்கும் உறுதி செய்யவில்லை.


Click it and Unblock the Notifications











