கிப்சன்-அடு்த்த காதல்-8வது குழந்தை

கிப்சனுக்கு வயது 53 ஆகிறது. பிரேவ்ஹார்ட் நாயகனான கிப்சனின் லேட்டஸ்ட் காதலி 39 வயதாகும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒக்சானா கிரிகோரிவா. இருவரும் காதலிப்பதை கடந்த ஏப்ரல் மாதம் வெளிப்படையாக அறிவித்தார் கிப்சன். இந்த நிலையில் தற்போது குழந்தை பெற்றுள்ளார் ஓக்சானா.
சில வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்ததாம். தற்போது தாயும், சேயும் நலமாக வீட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு ஒரு முறை சாட் ஷோவில் பங்கேற்ற கிப்சனிடம், ஓக்சானா கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்டபோது தம்ப்ஸ் அப் என்று விரலை உயர்த்திக் காட்டி புன்னகைத்தார் கிப்சன்.
கிப்சனின் முதல் மனைவி ராபின். இவருடன் 28 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார் கிப்சன். ராபினுக்கு 52 வயதாகிறது. ராபின் மூலம் ஏழு குழந்தைகள் கிப்சனுக்கு உள்ளனர்.
கடந்த ஆண்டு கோஸ்டாரிகாவில் தனது வீட்டுக்கு அருகே பிகினி உடையில் இருந்த ஒக்சானாவுடன் கிப்சன் போஸ் கொடுத்தது போன்ற புகைப்படம் வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராபின், உடனடியாக விவாகரத்து கோரி மனு செய்தார்.
தற்போது கிப்சன் மூலம் குழந்தை பெற்றுள்ள ஒக்சானாவும் ஏற்னவே கல்யாணம் ஆனவர்தான். ஜேம்ஸ் பாண்ட் பட நடிகர் டிமோதி டால்டன்தான், இவரது முதல் கணவர். அவர் மூலம் 12 வயதில் மகன் உள்ளான்.
பாடகியாக உள்ளார் ஒக்சானா. கிப்சனின் லேபல் என்ற இசை ஆல்பத்திற்காக பாடியுள்ளார். தற்போது பியூட்டிபுல் ஹார்ட்ஏக் என்ற இசைத் தொகுப்புக்குப் பாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











