பாப்பராஸி .. பாரீஸ் ஹில்டன் காயம்!

சர்ச்சை நாயகியாக அறியப்பட்டவர் பாரீஸ் ஹில்டன். காலாவதி ஆன டிரைவிங் லைசென்சுடன் காரை படு வேகமாக ஓட்டி பிடிபட்டு, சமூக சேவை செய்ய வேண்டும் என்று கோர்ட்டால் முன்பு உத்தரவிடப்பட்டார்.
இந்த நிலையில், செக் நாட்டில் பாப்பராஸி புகைப்படக்காரர்களிடம் சிக்கி காயமடைந்துள்ளாராம் ஹில்டன்.
செக் தலைநகர் பிராக் நகருக்கு வந்துள்ளார் பாரீஸ் ஹில்டன். அப்போது அவரது வருகையை அறிந்து ஏராளமான புகைப்படக்காரர்கள் அங்கு வ்து குவிந்தனர்.
அதை சற்றும் எதிர்பாராத பாரீஸ் ஹில்டன் வேகமாக ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது அழகிய கன்னம் கன்னிப் போய் காயமாகி விட்டது.
அந்தக் காயத்துடனேயே, அடுத்த நாள் காங்கிரஸ் சென்டரில் நடந்த குட் சார்லேட் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் ஹில்டன்.
அப்போதும் கூட புகைப்படக்காரர்கள் விடவில்லை. கன்னிய காயத்துடன் இருந்த பாரீஸ் ஹில்டனை புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர். அவர்களைத் தடுக்க முடியாமல் பாரீஸின் பாடிகார்டுகள் திணறினர். பின்னர் ஒரு வழியாக அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
பாரீஸின் பாய் பிரண்ட் பெஞ்சி மேடன் குட் சார்லட் இசைக் குழுவில் இடம் பெற்றுள்ள ராக்கர் ஆவார். காதலருடன் சேர்ந்து பாரீஸும் ஜாலியாக டூர் அடித்துக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











