பிரிட்னிக்கு கைகொடுக்கும் மடோனா

By Staff

Madonna with Britney Spears
பிரிட்னி ஸ்பியர்ஸை துரத்தி துரத்தி செய்தி போடுவதையும், புகைப்படம் எடுப்பதையும் மீடியாக்கள் நிறுத்த வேண்டும். அவருக்கு மன அமைதி ஏற்பட வழி விட வேண்டும் என்று பாப் அரசி மடோனா கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபகாலமாக மீடியாக்களில் பரபரப்பாக அடிபடும் செய்தியாகி விட்டார் பிரிட்னி. அவரைப் பற்றிய பல சர்ச்சை செய்திகளும், புகைப்படங்களும் ஹாலிவுட்டைக் கலக்கி வருகின்றன.

இதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் மடோனா. பிரிட்னி பின்னாலேயே போவதை மீடியாக்கள் நிறுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாட்டிலைட் ரேடியோ ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பிரிட்னி பிரச்சினையில் இருக்கிறார். இந்த நிலையில் அனைவரும் சேர்ந்து அவரைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். மாறாக அவரை துன்புறுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது.

என்னுடைய 11 வயது மகள் லூர்தஸுக்கு, பிரிட்னி என்றால் உயிர். என்னை விட பிரிட்னியைத்தான் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். லூர்தஸைப் போல உலகெங்கும் எக்கச்சக்கம் பேர் பிரிட்னியின் ரசிகர்களாக உள்ளனர். அனைவருமே பிரிட்னிக்காக கவலைப்படுகினறனர். அதை மீடியாக்கள் உணர வேண்டும்.

பிரிட்னியை எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அவரது பிளாக்அவுட் ஆல்பத்தை நான் ரசித்துக் கேட்டிருக்கிறேன் என்றார் மடோனா.

மடோனா பிரிட்னி மீது பரிவு காட்டியிருப்பது இது புதிதல்ல. ஏற்கனவே 2003ம் ஆண்டு நடந்த எம்டிவி விருது விழாவின்போதும் பிரிட்னியுடன் பாசத்துடன் பழகினார் மடோனா. விருது விழாவின்போது இருவரும் உதட்டோடு உதடு பொருத்தி முத்தமிட்டும் கலக்கினர். இதுதவிர 'மீ எகைன்ஸ்ட் தி மியூசிக்' என்ற ஆல்பத்திலும் இணைந்து பணியாற்றினர் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X