பமீலாவின் கவர்ச்சி விளம்பரம்-ஆஸி.யில் தடை

பே வாட்ச் தொடரின் நாயகியான பமீலா கிரேசி டொமைன்ஸ் என்ற இன்டர்நெட் நிறுவனத்திற்கான விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் தனது உடையைக் கழற்றும் பமீலா, தங்கத்தால் ஆன பிகினி அணிந்தபடி தோன்றுகிறார். பின்னர் அவர் மீது சக ஆண் ஊழியர்கள், பாலை ஊற்றுவது போல காட்சி உள்ளது.
படு கவர்ச்சிகரமாக இந்த விளம்பரம் அமைந்துள்ளது. இதையடுத்து விளம்பரங்களுக்கான கட்டுப்பாட்டை மீறும் வகையில் இது இருப்பதாக கூறி அதை டிவிகளில் ஒளிபரப்ப ஆஸ்திரேலிய அதிகாரிகள் தடை விதித்து விட்டனர்.
ஆனால் இந்த தடையை ஆணாதிக்கம் பிடித்தவர்கள் தான் பிறப்பித்துள்ளனர். இதை எதிர்த்து போரிட்டு மீண்டும் அனுமதி பெறுவோம் என கிரேசி டொமைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications