க்ரூஸைக் காதலித்தேன்- செர்

By Staff

Cher
80களில் நான் டாம் க்ரூஸைக் காதலித்தேன். ஆனால் அப்போது டாம் க்ரூஸ் மிகவும் வெட்கப்படுவார். அந்தக் காதல் பின்னர் கரைந்து போய் விட்டது என்று மலரும் நினைகளைப் பறக்க விட்டுள்ளார் பாடகியும், நடிகையுமான செர்.

பாப் பாடகியான செர், ஒரு நடிகையும் கூட. புகழ் பெற்ற ஓப்ரா வின்பிரேஷ டாக் ஷோவில் அவர் கலந்து கொண்டு டாம் க்ரூஸுடனான தனது காதல் குறித்து பரபர தகவல்களை வெளியிட்டுள்ளார் செர்.

லாஸ் வேகாஸ் நகரில் 4000க்கும் மேற்பட்டோருக்கு மத்தியில், செர் பேட்டியை ஒளிபரப்பினர். அதில் செர், டாம் க்ரூஸுடனான தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நான் 80களில்தான் க்ரூஸைச் சந்தித்தேன். அப்போது அவர் இன்னும் இளமையாக இருந்தால், மிகவும் ஷை டைப் அவர். 80களின் தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்தான் முதன் முதலில் க்ரூஸை சந்தித்தேன். அதன் பின்னர் எங்களுக்குள் ஒரு அன்பு இழையோடியது, நட்பு தொடர்ந்தது. காதலும் வளர்ந்தது. ஆனால் அது கை கூடவில்லை. அன்போடும், நட்போடும் பிரந்து விட்டோம் என்றார் செர்.

செர்ருக்கும், க்ரூஸுக்கும் இடையிலான காதல், க்ரூஸ் நடித்த ரிஸ்கி பிசினஸ் படம் வெளியானதற்குப் பின்னர் ஏற்பட்டதாம். க்ரூஸை தான் காதலித்தது குறித்து கூறிய செர், எதற்காக அந்த காதல் முறிந்தது என்பதை விளக்கவில்லை.

இந்தக் கடந்த கால காதல் கதை குறித்து டாம் க்ரூஸ் தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.

செர்க்கு இப்போது வயது 61, க்ரூயிசுக்கு 45 என்பது முக்கியமான சமாச்சாரம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X