பிரிட்னி தங்கச்சிக்கு கல்யாணம்!

By Staff

Britney Spears with Jamie Lynn Spears
பாப் ஸ்டார் பிரிட்னி ஸ்பியர்ஸின் தங்கச்சி ஜேமி லின் ஸ்பியர்ஸுக்கு கல்யாணம் நடக்கவுள்ளது. தனது காதலர் கேசி அல்ட்ரிட்ஜை, அக்கா பிரிட்னிக்குச் சொந்தமான லூசியானாவில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து கரம் பிடிக்கவுள்ளார் ஜேமி.

அப்படியே பிரிட்னியை உரித்து வைத்தது போலவே இருப்பார் ஜேமி. இவரும், கேசியும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இன்னும் 18 வயதைக் கூட தாண்டாதவர் ஜேமி. இந்த நிலையில் தற்போது கேசிக்கும், தனக்கும் கல்யாணம் நடக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஜேமி. இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தமும் கூட நடந்து விட்டதாம்.

திருமணத்தை சிறப்பாக நடத்த பிரிட்னி - ஜேமியின் தந்தை திட்டமிட்டுள்ளார். கல்யாணத்திற்கு பிரிட்னியும் வருகை தரவுள்ளாராம். சமீப காலமாக பல்வேறு குழப்பங்கள், சர்ச்சைகளில் சிக்கி மனம் நொந்து போயுள்ள பிரிட்னிக்கு தங்கையின் கல்யாணச் செய்தி ஆறுதலாக இருக்கிறதாம்.

இன்னொரு முக்கியமான விஷயம், ஜேமி இப்போது கர்ப்பமாக உள்ளார். அதுவும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு இப்போது ஒரு கவலை வந்துள்ளதாம். கல்யாணத்திற்கு முன்பு குழந்தை பிறந்து விடாதா என்பதுதான் அது!

ஏன் இந்தக் கவலை?. அப்போதுதானே டிரிம்மாக கல்யாண டிரஸ் போட்டுக் கொண்டு கலகலப்பாக இருக்க முடியும் என்கிறார் ஜேமி.

நல்ல கவலைதான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X