நவோமிக்கு வழுக்கை?

உலகம் முழுவதும் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கருப்பழகி நவோமி கேம்பெல். சுண்டினால் ரத்தம் தெறிக்கும் வெள்ளை அழகிகளுக்கு மத்தியில், கருப்பு வைரமாக பிரகாசித்தவர் நவோமி. இன்றளவும் பூனை நடையில் சீற்றம் குறையாத பெண் சிங்கமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நவோமி.
சமீபத்தில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரி மீது எச்சில் துப்பியதாக சர்ச்சையில் சிக்கினார் நவோமி. இந்த நிலையில் தலை போகிற ஒரு மேட்டரை லீக் செய்துள்ளார் நவோமியின் தோழி ஹக்கி.
நவோமிக்கு முடி கொட்டி வருகிறதாம். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு கொட்ட ஆரம்பித்த முடி இப்போது வேகமாக கொட்டி வருகிறதாம். கேட் வாக் நிகழ்ச்சிகளுக்காக முடியில் ஏகப்பட்ட அலங்காரங்கள், மாற்றங்கள் செய்ததால் ஏற்பட்ட விளைவாம் இது.
முடி கொட்ட ஆரம்பித்ததால், தலைமுடியைக் காப்பாற்ற சில வேலைகளை செய்தும் கூட புண்ணியம் இல்லையாம். தற்போது வழுக்கை நிலையை நோக்கி அவரது தலை போய்க் கொண்டிருக்கிறதாம்.
இதுகுறித்து ஹக்கி கூறுகையில், சமீப காலமாகவே நவோமியின் தலைமுடி வேகமாக கொட்டத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அவரது ஹேர்ஸ்டைலிஸ்ட் சாம் மெக்நைட முன்பு என்னிடம் கூறுகையில், நவோமி மிகவும் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அவரது தலைமுடிக்கு கியாரண்டி கிடையாது என்றார். ஆனால் நவோமி கவனக்குறைவாகவே இருந்து வருகிறார் என்றார்.
பெண்ணுக்கு அழகே தலைமுடிதான், தலையைக் கவனிப்பாரா நவோமி?


Click it and Unblock the Notifications











