ஹாலிவுட் நடிகர் ஜான் டிரவோல்டாவின் மகன் மரணம்

By Staff

John Travolta with son Jett http://tamilphotos.filmibeat.com/v/hollywood/actor/john-travolta/
பஹாமஸ்: ஹாலிவுட் நடிகர் ஜான் டிரவோல்டா மற்றும் கெல்லி பிரஸ்டன் தம்பதியின் 16 வயது மகன் ஜெட் டிரவோல்டா வலிப்பு நோயால் மரணமடைந்தார். குடும்பத்துடன் ஜான் டிரவோல்டா பஹாமஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜெட் டிரவோல்டாவின் மரணம் குறித்து ஜான் டிரவோல்டாவின் வக்கீலான மைக்கேல் ஒஸி கூறுகையில், காலை 10 மணிக்கு ஜெட் டிரவோல்டாவுக்கு வலிப்பு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது பலனளிக்கவில்லை.

வலிப்பு வந்து ஜெட் டிரவோல்டா கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் மரணம் விளைந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. திங்கள்கிழமை பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது. அதன் பின்னர்தான் சாவுக்கான காரணம் தெரியும்.

ஜெட் டிரவோல்டாவின் உடல் அடக்கத்திற்காக புளோரிடா மாகாணம், ஓகலாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது என்றார்.

கெல்லி பிரெஸ்டனும் ஒரு நடிகைதான். டிரவோல்டா - கெல்லி தம்பதிக்கு 8 வயதில் எல்லா என்ற மகளும் உள்ளார்.

ஜெட் டிரவோல்டாவுக்கு இருந்தது கவஸாகி என்ற நோயாகும். இது ஜப்பானில் பிரபலமாக உள்ள நோய். இதன் காரணமாகவே இந்த நோய்க்கு கவஸாகி என்று பெயர். ரத்தத்தில் உள்ள குழாய்கள் அடைத்துக் கொள்வதால் இந்த நோய் உருவாகிறது. இது இதயத்தை செயலிழக்க வைக்கும் அபாயகரமான நோயாகும். குழந்தைகளை மட்டும் தாக்கும் மிகவும் அரிதான நோய் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X