போதை .. சிக்கிய நடிகை

ஞாயிற்றுக்கிழமை இரவு லோயர் மன்ஹாட்டன் பகுதியில் வைத்து டட்டும் கைது செய்யப்பட்டார். அவரது பேன்ட்டை போலீஸார் சோதனையிட்டபோது வலது பக்க பாக்கெட்டில் 2 பை பாக்கெட் கொகைன் போதைப் பொருள் சிக்கியது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
44 வயதான டட்டும் பின்னர் மன்ஹாட்டன் கிரிமினல் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது தடை செய்யப்பட்ட போதைப் பொருளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு இதுதொடர்பான சிகிச்சை அளிக்கவும் போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை ஜாமீனில் விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. கோர்ட்டிலிருந்து வெளியே வந்த டட்டும், காத்திருந்த செய்தியார்களிடம் பேசவில்லை. வேகமாக வெளியேறி விட்டார்.
ரெஸ்க்யூ மீ என்ற டிவி தொடரில் நடித்துள்ளார் டட்டும். 1973ல் வெளியான பேப்பர் மூன் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இளம் வயதில் ஆஸ்கர் வென்ற பெருமையும் டட்டுமுக்கு உண்டு.


Click it and Unblock the Notifications











