'லைசென்ஸ்' வாங்கிய பியான்ஸ்!

கருப்புரோஜா பியான்ஸ், மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரி. இவரது குரல் வசீகரத்திற்கு அங்கு ஒரு கூட்டமே காத்துக் கிடக்கிறது. இவருக்கும், ஷான் கார்ட்டருக்கும் இடையே ஆறு ஆண்டு காலமாக காதல் நிலவி வந்தது. கார்ட்டருக்கு ஜே-இசட் என்ற செல்லப் பெயரும் உண்டு. இவரும் பாடகர்தான்.
ரோஜா, ஆர்.கே.செல்வமணி எப்போது கல்யாணம் செய்து கொள்வார்கள் என்று கொஞ்ச காலத்திற்கு முன்பு கோலிவுட்டே கொதித்துக் கிடந்ததல்லவா, அதுபோலவே ஹாலிவுட்டிலும் இவர்கள் எப்போது கல்யாணம் செய்து கொள்வார்கள் என்று நிறையவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் தனது ஆறாண்டுக் காதலை கல்யாணத்தில் முடிக்க பியான்ஸ், முடிவு செய்து விட்டார். கடந்த செவ்வாய்க்கிழமைதான் கல்யாணம் செய்து கொள்வதற்கான முறைப்படியான லைசென்ஸை பெற்றார் பியான்ஸ் (அங்கெல்லாம் கல்யாணம் செய்து கொள்ளவே லைசென்ஸ் போல).
லைசென்ஸ் வாங்கிய 60 நாட்களுக்குள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அமெரிக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதி. எனவே இன்னும் 2 மாதங்களுக்குள் பியான்ஸுக்கு கல்யாணமாகி விடும் என்பது உறுதியாகி விட்டது.


Click it and Unblock the Notifications











