ஹோட்டல் டிசைனிங்கில் பிராட் பிட்!

By Staff

Brad Pitt with Angelina Jolie
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் பிராட் பிட் புது அவதாரம் எடுத்துள்ளார். துபாயில் கட்டப்படவுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் வளாகத்தை அவர் வடிவமைக்கவுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில், சமூக விழிப்புணர்வுடன் இந்த ஹோட்டல் கட்டப்படவுள்ளதாக அதைக் கட்டப் போகும் நிறுவனம் அறிவித்துள்ளது.

மொத்தம் 800 சொகுசு அறைகளுடன் கூடியதாக இந்த நட்சத்திர ஹோட்டல் அமையவுள்ளது. அருகிலேயே பொழுதுபோக்கு வளாகமும் அமையவுள்ளது. நட்சத்திர கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்களை மனதில் கொண்டு இந்த நட்சத்திர ஹோட்டல் அமையவுள்ளது.

எந்த இடத்தில் இந்த ஹோட்டல் எழும்பவுள்ளது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்த ஹோட்டலை வடிவமைக்கும் குழுவில், பிராட் பிட்டும் இடம் பெற்றுள்ளார். பிட் நடிகர் மட்டுமல்ல, கட்டடவடிவமைப்பு நிபுணரும் கூட. இதுகுறித்து அவர் கூறுகையில், நடிப்பு மட்டும் எனது தொழில் அல்ல. கட்டடக் கலையும் எனது முக்கிய லட்சியங்களில் ஒன்று.

இதுதான் எனது வாழ்க்கையில் முதன் முதலில் மேற்கொள்ளவுள்ள மிகப் பெரிய கட்டுமானத் திட்டமாகும். இந்த முடிவை எடுக்க நான் சிரமப்படவில்லை.

விைரவில் இந்தத் திட்டம் குறித்த தகவல்கள் விரிவாக வெளியிடப்படும். பார்ப்பவர்களின் மனதைப் பறிக்கும் வகையில், இந்த ஹோட்டல் அமையும் என்றார் பிட்.

ஆஸ்கர் விருது பெற்ற பிட், அமெரிக்காவின் வடக்கு ஆர்லியான்ஸ் மாகாணத்தில், கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 150 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளை வடிவமைப்பதிலும் பிராட் பிட் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கட்டட வடிவமைப்பு திறன் குறித்து பிட் தொடர்ந்து கூறுகையில், கட்டட வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து எனக்கு நிறையத் தெரியும். ஏதாவது ஒரு அமைப்பை டிசைன் செய்யச் சொன்னால் உடனடியாக செய்து விடுவேன். அது எனக்கு ஜாலியான ஒன்று என்கிறார் கூலாக.

துபாயில் கட்டப்படவுள்ள இந்த பிரமாண்ட ஹோட்டலை, சபீல் பிராப்பர்டீஸ் என்கிற நிறுவனம் கட்டுகிறது. கட்டுமானப்பணிகளை அமெரிக்காவைச் சேர்ந்த கிராப்ட் என்கிற நிறுவனம் மேற்கொள்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X