புதுசா கல்யாணமாவன், 'டபுள் பெட்' கொடுங்களேன்: 007 க்ரெய்க்!

By Siva

Rachel Weisz and Daniel Craig
ஜேம்ஸ் பாண்ட் 007 டேனியல் கிரெய்க் தனது புது மனைவியை தன்னுடனேயே வைத்துக் கொள்வதற்காக வேனில் டபுள் பெட் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் 007 டேனியல் கிரெய்க் (43) தற்போது ஸ்கைஃபால் என்ற படத்தில் நடிக்கிறார். கடந்த ஜூன் மாதம் தான் அவருக்கும், பிரபல நடிகை ரேசச்ல் வீஸிற்கும் திருமணம் நடந்தது.

தற்போது ஷூட்டிங் வந்துவிட்டால் அடிக்கடி போய் மனைவியைப் பார்க்க வேண்டுமல்லவா. அந்த நேரத்தை குறைக்கத் தான் தனது வேனில் டபுள் பெட் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மனைவியை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டால் நேரத்தை மிச்சப்படுத்தி ஷூட்டிங் போகலாம் என்று நினைக்கிறார் (அதெப்படி மனைவி பக்கத்தில் இருந்தால் டைம் மிச்சமாகும், பாண்டி??).

ஸ்கைஃபால் படத்தில் நீளமான தாடியுடன் உளவாளி வேடத்தில் வருகிறார் க்ரெய்க். டபுள் பெட் தவிர்த்து தென் அமெரிக்க காப்பிக் கொட்டைகளுடன் கூடிய காபி மெஷின், 2 பாடிகார்டுகள், டிரெய்னர், ஜிம் வசதி ஆகியவையும் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோஸ், லண்டன், சீனா, துருக்கி மற்றும் ஸ்காட்லாந்தில் நடக்கிறது. வரும் 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி இந்த படம் இங்கிலாந்தில் திரையிடப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X