பிட்டை விட்டுட்டேன்.. ஜெனிபர்!
பிராட் பிட் மீதான காதலை முழுமையாக துடைத்தெடுத்து விட்டேன். இதில் யார் மீதும் குற்றம் சொல்வதற்கில்லை என்று கூறியுள்ளார் ஜெனீபர் அனிஸ்டன்.
பிராட் பிட்டும், ஜெனீபரும் காதலித்த கதை ஹாலிவுட்டில் ரொம்பப் பிரபலம். 2000மாவது ஆண்டு இருவரும் கல்யாணமும் செய்து கொண்டனர்.
மாலிபு தீவில் நடந்த இந்த திருமணம் பிரமாண்டமானதாக அமைந்தது.
ஆனால் மிஸ்டர் அன்ட் மிஸஸ் படப்பிடிப்பின்போது ஏஞ்செலீனா ஜூலி மீது காதல் கொண்டார் பிராட் பிட். இது பிட் - ஜெனீபர் வாழ்வில் விரிசலை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் அப்படியெல்லாம் இல்லை என்று கூறினார் பிட். ஜூலியும் அப்படியே கூறினார். ஆனாலும் சந்தேகம் வலுத்ததால் 2005ம் ஆண்டு பிட்டை விவாகரத்து செய்தார் ஜெனீபர்.
அத்துடன் முடிந்தது பிராட் பிட் - ஜெனீபர் காதல் அத்தியாயம். அதன் பின்னர் பிட்டும், ஜூலியும் கல்யாணம் செய்து கொண்டு வாழத் தொடங்கினர். இருந்தாலும் பிட் மீதான காதலை முழுமையாக விடாமல் அவர் நினைவாகவே இருந்து வந்தார் ஜெனீபர்.
இந்த நிலையில் பிட் மீதான காதலை முழுமையாக துடைத்தெடுத்து விட்டதாக கூறியுள்ளார் ஜெனீபர். கூடவே 31 வயதாகும் புதுக் காதலரான ராக் கலைஞர் ஜான் மேயருடன் சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஜெனீபருக்கு 40 வயதுதான் ஆகிறது.
பிட் குறித்து ஜெனீபர் கூறுகையில், இந்தக் கதை முடிந்து விட்டது. இதில் யாரும் வில்லனும் கிடையாது, ஹீரோவும் கிடையாது, ஹீரோயினும் கிடையாது.
பிட்டையோ அல்லது ஜூலியையோ நான் குறை சொல்ல விரும்பவில்லை. இது முடிந்து போன விஷயம். சுத்தமாக இப்போது எனது மனதில் பிட் இல்லை என்று கூறியுள்ளார் ஜெனீபர்.


Click it and Unblock the Notifications











