ஜெனீபர் அனிஸ்டனின் 'எக்கோ'

ஏற்னவே ஜெனீபர் அனிஸ்டன் பிராட் பிட்டுடன் இணைந்து பிளான் பி என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனத்ைதத் தொடங்கினார். ஆனால் 2005ம் ஆண்டில் அந்தக் கூட்டணி உடைந்தது. இருவரும் பிரிந்து விட்டனர்.
அனிஸ்டனின் முன்னாள் கணவர்தான் பிராட் பிட் என்பது தெரியும்தானே?
இந்த நிலையில் ஹானுடன் இணைந்து புதிய பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் 39 வயதாகும் அனிஸ்டன். எக்கோ பிலிம்ஸ் என்பது அதன் பெயராம். ஹான், தி டிபார்ட்டட் படத்தின் செயல் தயாரிப்பாளர் ஆவார்.
இந்தப் புதிய பட நிறுவனம் பல நிஜக் கதைகளையும், நாவல்களையும் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாம். அனைத்திலுமே அனிஸ்டன்தான் நாயகியாக இருப்பாராம்.
இதுகுறித்து அனிஸ்டனும், ஹானும் கூறுகையில், ரசிகர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான படங்களைக் கொடுக்கப் போகிறோம். அதனால்தான் சிம்பாலிக்காக எக்கோ பிலிம்ஸ் என பெயரிட்டுள்ளோம் என்றனர்.
நல்லா எதிரொலிக்கட்டும்!


Click it and Unblock the Notifications











