ஆஸ்கர்-சிறந்த இயக்குநர் விருதுக்காக மோதும் கேமரூனும் முன்னாள் மனைவியும்!

By Staff

James Cameron and Kathryn Bigelow
லாஸ்ஏஞ்சல்ஸ்: வசூலில் நாளொரு புதிய சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார், 9 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் போட்டியாக அவரது முன்னாள் மனைவி கேதரீன் பிக்லோ இயக்கிய படமும் 9 விருதுகளுக்கு போட்டியிடுகிறது.

உலக சினிமாவின் கிரீடமாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. கடந்த 81 ஆண்டுகளாக மிகவும் போற்றத்தக்க வகையில் வழங்கப்பட்டு வருகிறது. 82வது ஆஸ்கர் விழா விரைவில் நடக்க உள்ளது.

இதற்காக சினிமா துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலிலிருந்து தான் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த இயக்குநர் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அவதார் படம், மற்றும் தி ஹர்ட் லாக்கர் படம் ஆகியவை தலா 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படம் 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, கலை இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை, சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த விசுவல் எபக்ட்ஸ் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் அவதார் படம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

அவதார் படத்தை டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரோன் இயக்கி இருக்கிறார். இதே போல 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இன்னொரு படம் தி ஹர்ட் லாக்கர் படம், ஈராக் போரை பற்றியது. இந்த படத்தை, அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி கேதரீன் பிக்லோ இயக்கி இருக்கிறார்.

சிறந்த டைரக்டர் விருதுக்காக 5 டைரக்டர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இந்த 2 பேருடன், இன்குளோரியஸ் பாஸ்ட்டர்டு படத்தை இயக்கிய குயன்டைன் டாராண்டினோ, பிரீஷியஸ் படத்தை டைரக்டு செய்த லீ டேனியல்ஸ், அப் இன் தி ஏர் படத்தை இயக்கிய ஜேசன் ரீட்மன் ஆகியோர் பெயர்கள் இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற்று உள்ளன.

சிறந்த படத்துக்கான விருதுக்கு 11 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. நடிகருக்கான விருதுக்கு ஜெப் பிரிட்ஜஸ் (கிரேசி ஹார்ட்), ஜார்ஜ் குளூனி (அப் இன் தி ஏர்), காலின் பிர்த் ( தி சிங்கிள் மேன்), மோர்கன் பிரிமேன்(இன்விக்டஸ்), ஜெர்மி ரெனெர் (தி ஹர்ட் லாக்கர்) ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகைக்கான விருதுக்கு சாண்டிரா புல்லாக் (தி பிளைண்டு சைடு), மெரில் ஸ்ட்ரீப் (ஜுலி ஜுலியா), ஹெலன் மிரன்( தி லாஸ்ட் ஸ்டேஷன்), காரே மல்லிகன் (ஏன் எடுகேஷன்), கபோரி சிடிபே (ப்ரீஷியஸ்).

ஆஸ்கார் விருது போட்டியி்ல் கவி இந்திப் படம்!

அமெரிக்க டைரக்டர் கிரெக் ஹெல்வி டைரக்டு செய்த இந்தி படம் கவி, குறும் படப்பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதை குனீத் மோங்கா, ஹரீஷ் அமீன், ஹெல்வி ஆகியோர் வெறும் 8 நாட்களில் ரூ 14 லட்சம் மட்டும் செலவு செய்து தயாரித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X