கிளப்களி்ல் கலக்கும் கிறிஸ்டினா!

ஹாலிவுட்டின் ஹாட்டஸ்ட் பாடகி கிறிஸ்டினா. இப்போது செக்ஸி மதர் என்ற புதுப் பெயர் அவருக்குக் கிடைத்துள்ளது. காரணம், அவரது
செயல்பாடுகள்.
பாடகியாக மட்டுமல்லாது, நைட் கிளப்களுக்குப் போவதிலும் பெயர் போனவர் கிறிஸ்டினா. நான்கு மாதங்களுக்கு முன்புதான் கிறிஸ்டினாவுக்கு மாக்ஸ் லிப்ரான் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பின்னர் வேகம் வேகமாக தனது உடல் பொலிவை பழைய நிலைக்குக் கொண்டு வந்த கிறிஸ்டினா பழையபடி கிளப்களுக்குப் போக ஆரம்பித்திருக்கிறாராம். மேலும் முன்பு போலவே கிளப்களில் ஆட்டமும், பாட்டமுமாக கலக்குகிறாராம்.
இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ஹாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், நாள் முழுவதும் எனது மகனுடன்தான் செலவிடுகிறேன். எப்போதாவது வெளியே போக வேண்டும் என நினைக்கும் போது கணவருடன் போகிறேன். இதைப் போய்ப் பெரிதாக பேசுகிறார்களே என்கிறார்.
அத்தோடு நில்லாமல், கிளப்களில் நான் இருப்பதைப் போன்ற புகைப்படங்களை வெளியிட்டவர்கள், என் அருகிலேயே எனது கணவரும் இருப்பதைப் போன்ற புகைப்படங்களை ஏன் வெளியிடுவதில்லை என்றும் எதிர் கேள்வி கேட்கிறார்.
கடந்த சனிக்கிழமையன்று கிறிஸ்டினா, லாஸ் வேகாஸில் சீசர்ஸ் பாலஸ் என்கிற நைட் கிளப்புக்கு வந்திருந்தார். அங்கு நடந்த ஸ்டீபன் வெப்ஸ்டர் வெள்ளி நகை தொகுப்பை வெளியிடும் விழா அது. அந்த நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சியாக டிரஸ் அணிந்து வந்திருந்தார் கிறிஸ்டினா. இந்தப் படங்களும் வெளியாகி வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு நல்ல அவலாகி விட்டது.


Click it and Unblock the Notifications











