நான் கர்ப்பிணி அல்ல.. ஜூலி

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இதழில், ஜூலி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அதை ஜூலியின் செய்தித் தொடர்பாளர் மறுத்தார்.
இதையடுத்து தான் கர்ப்பமாக இல்லை என்பதை காட்டுவதற்காக உடலை ஒட்டிய இறுக்கமான உடையில், தனது மூத்த மகன் மட்டாக்ஸுடன், நியூ ஆர்லியான்ஸில் ஷாப்பிங் செய்தார் ஜூலி.
அப்போது அவரை புகைப்படம் எடுக்க குவிந்த புகைப்படக்கார்ரகளிடம் தனது வயிறு பிளாட் ஆக இருப்பதைப் பாருங்கள் என்றும் சிரித்தபடி கூறினார் ஜூலி.
ஜூலியும், அவரது மகனும் சுதந்திரமாக ஷாப்பிங் செய்வதற்காக, அந்தக் கடையின் உரிமையாளர், சிறிது நேரம் கடையை பூட்டி வைத்தார். ஜூலியும், மகனும் போன பின்னர்தான் மீண்டும் கடை திறக்கப்பட்டது.
ஜூலிக்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் விவியான், நோக்ஸ் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன என்பது நினைவிருக்கலாம். பிராட் பிட்- ஜூலி தம்பதிக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications