காதலின் பெயரில் ஒரு சண்டை!

தி மஸில்ஸ் ஃப்ரம் பிரஸ்ஸல்ஸ் எனப் புகழப்பட்ட ஜீன் கிளாட் வான் டேம் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர். ப்ளட் ஸ்போர்ட், டபுள் இம்பாக்ட், யுனிவர்ஸல் ஸோல்ஜர் படங்களின் மூலம் மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக புகழப்பட்டவர்.
ஆனால் மனைவியைத் துன்புறுத்துதல், அடிக்கடி நிர்வாணமாகி தன் உடலை பொது இடத்தில் காட்டிக் கொள்வது போன்ற நடவடிக்கைகளால் பெயராக் கெடுத்துக் கொண்டார்.
இப்போதும் கூட வருடத்துக்கு இரண்டு படங்களில் நடிக்கிறார் இந்த 47 வயது ஹீரோ. ஆனாலும் முன்பு மாதிரி பெயரும் புகழும் இல்லையே என்ற வருத்தம் அவரை வாட்டி வதைக்கிறது.
இதுகுறித்து ஒரு இணையதளத்துக்கு அளித்து பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
இதுவரை 36 படங்கள் கொடுத்திருக்கிறேன். அனைத்துமே சர்வதேசத் தரத்தில், பெரிய வசூலைக் குவித்தவை.
என் படங்களைப் புரிந்து கொள்ள தனி அறிவு வேண்டாம். ஒரு அமெரிக்கரைக் கன்னத்தில் அறைந்தாலும் வலிக்கும், இந்தியரை அறைந்தாலும் வலிக்கும். அடியும் வலியும் எப்படி எல்லாரும் பொதுவான உணர்வைத் தருகிறதோ, அம்மாதிரி பொதுவான உணர்வைப் புரிதலைத் தருபவை என் படங்கள்....
இன்றைக்கும் நான்தான் உண்மையான ஆக்ஷன் ஹீரோ. அதை நிரூப்பிக்க வருகிறது என்னுடைய இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ஃபுல் லவ் படம், என்கிறார் வான் டேம்.
காதலின் பெயரில் ஒரு சண்டையா...


Click it and Unblock the Notifications











