ஹாலிவுட் நடிகர் டேவிட் கேரடின் மர்ம மரணம்!

ஓட்டல் சிப்பந்திகள்தான் நைலான் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த இவர் உடலைக் கண்டுபிடித்தனர். இது கொலையா, தற்கொலையா என்பதை தாய்லாந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எழுபதுகளில் வெளியான குங்பூ என்ற டெலிவிஷன் தொடரின் மூலம் பிரபலமான கேரடின், பின்னர் ஏராளமான படங்களில் நடித்தார்.
சமீபத்தில் வெளியாகி வசூலில் பெரும் வெற்றி பெற்ற 'கில்பில்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் இரு பாகங்களிலும் நடித்துள்ளார். இவரது பெயர் நான்கு முறை கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள மிகவும் ஆடம்பரமான ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடலை ஓட்டல் சிப்பந்திகள் கண்டுபிடித்தனர். அலமாரி ஒன்றில் திரைச்சீலைக்கு பயன்படுத்தும் நைலான் கயிற்றில்தான் அவர் உடல் நிர்வாணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
திட்டமிட்டு கொலை செய்து அவரை தூக்கில் மாட்டிவிட்டிருப்பார்களோ என போலீசார் விசாரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











