மடோனா-லேடி காகா...கிட்டத்தட்ட 'லிப் லாக்'!

வாய் முத்தம் கொடுப்பதில் மடோனா கில்லாடியாக இருக்கிறார். அதிலும் பெண்களுக்குத்தான் திடீர் திடீரென முத்தம் கொடுத்து திகலடிக்க வைக்கிறார்.
2003ம் ஆண்டு இப்படித்தான் பிரிட்னி ஸ்பியர்ஸ், கிறிஸ்டியானா அகுலியாரா ஆகியோருக்கு உதட்டோடு உதடு பொருத்தி அழுத்தமான முத்தத்தைக் கொடுத்து அனைவரையும் எகிற வைத்தார்.
இந்த வரிசையில் நேற்று முன்தினம் இளம் பாப் பாடகி லேடி காகாவும் சேரவிருந்தார். ஆனால் கடைசி நொடியி்ல் அவரது உதடு மடோனாவின் பிடியிலிருந்து தப்பி விட்டது.
எம்டிவி4 இசை நிகழ்ச்சியில் காகாவும், மடோனாவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக பங்கேற்றார் மடோனா. இதனால் உற்சாகத்துடன் அவருடன் இணைந்து பாடினார் காகா. கீனன் தாம்ப்சன் இதை தொகுத்து வழங்கினார்.
அப்போது விளையாடடாக காகாவும், மடோனாவும் சண்டை போட்டனர். இதையடுத்து குறுக்கிட்ட கீனன், இருவரையும் முத்தமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து இருவரும் கிட்ட நெருங்கினர்.
சரிதான், மறுபடியும் 'மவுத் ஆர்கன்' வாசிக்கப் போகிறார் மடோனா என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தபோது கிட்டக்க வந்து பின்னர் கீனனுக்கு கிஸ்ஸடித்து விட்டு இரு பாடகிகளும் விலகிச் சென்றனர்.


Click it and Unblock the Notifications











