ஜெஸிகாவுக்கு பமீலா அனுப்பிய செய்தி!

மிருக வதைக்கு எதிரான பீடா (PETA) அமைப்பின் மூலம் அவர் ஜெஸிகாவுக்கு அனுப்பிய கடிதத்தில், இறைச்சிக்காக இயங்கும் தொழிற்கூடங்களால் உலக சுற்றுச் சூழலுக்கு எத்தனை மோசமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளதாக பமீலா தெரிவித்துள்ளார்.
ஜெஸிகாவுக்கு விவரம் புரியவில்லை. அதனால்தான் பெண்களை இறைச்சி உண்ணத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பனியனை அணிந்து வந்திருக்கிறார். இனி புரிந்து கொள்வார் என நம்புகிறேன், என்றார்.
இதுகுறித்துப் பேசிய ஜெஸிகா, நான் சும்மா விளையாட்டுக்காகத்தான் அப்படியொரு பனியனை அணிந்து வந்தேன். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்றுகூட கவனிக்கவில்லை. இனி மேலாடை அணியும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிட்டுத்தான் அணிவேன். ஆனால் சினிமாவில் அதற்கு வாய்ப்பே இருக்காது(!).
ஆனால் இதற்காக யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்றார் அவர்.
Comments


Click it and Unblock the Notifications