பிரிட்னி... 13-ல் டிரிங்ஸ், 14-ல் செக்ஸ், 15-ல் டோப்!

By Staff

Britney Spears
பதிமூணு வயசில் குடிக்க ஆரம்பிச்சார்... 15 வயதில் கற்பை விரும்பி இழந்தார், 15 வயதில் போதை மருந்துக்கு அடிமையானார்... யாருடையது இந்த 'அற்புதமான' பயாக்ரபி?

அமெரிக்காவின் முன்னணி பாப் இசைப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்தான் இத்தனைப் பெருமைகளுக்கும் சொந்தக்காரர்!

இவரது வாழ்க்கை வரலாற்றை 'புயலின் வழியே...' (Through the Storm) எனும் தலைப்பில் லின் ஸ்பியர்ஸ் எழுதியுள்ளார். இதில் பிரிட்னியைப் பற்றிய பல ஷாக் ரகசியங்களைக் கூறியுள்ளார் லின்.

இப்போது 26 வயதாகும் பிரிட்னிக்கு முதல் போதை அறிமுகமானது, 13 வயதிலாம். அப்போது அவர் டிஸ்னியின் மிக்கி மவுஸ் கிளப்பில் சேர்ந்திருந்தாராம். இந் நிலையில் குடிப் பழக்கம் அவரைத் தொற்றிக் கொண்டதாம்.

14 வயதில் ஒரு டிவி ஷோவிலிருந்து திடீரென்று விலகிய பிரிட்னி, 18 வயதான தனது சீனியர் மாணவருடன் தனது கெண்ட்வுட் வீட்டில் செக்ஸ் வைத்துக் கொண்டாரம். தன் கற்பை அனுபவித்து இழந்தாராம்!

15 வயதில் போதை மருந்துக்கு அடிமையான பிரிட்னி, தனது 16வது வயதில் கொக்கைன் போதை மருந்துடன் பிரிட்டிஷ் விமானத்தில் பிடிபட்டிருக்கிறார்.

பிரிட்னிக்கு 16 வயதானபோது, அவரை டிம்பர்லேக் என்பவருடன் ஒன்றாகப் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அனுமதித்துள்ளார் அவரது தாயார். டிம்பர்லேக்குடன் உறவைத் தொடர்வது நல்லது என்பதால் பிரிட்னியின் தாய் அப்படிச் செய்தாராம்.

ஆனால் பிரபல பாப் பாடகி ஆனபிறகு, பிரிட்னி முழுக்க முழுக்க அவரது மேனேஜர்களின் கட்டுப்பாட்டில் போய்விட்டாராம். இது நான் செய்த மிகப் பெரிய தவறு என பிரிட்னியின் தாய் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

இன்னும் இப்படி ஏடா கூடமான ஏகப்பட்ட தகவல்கள் கொட்டிக் கிடக்கும் இந்தப் புத்தகம்தான் இன்றைக்கு ஹாட் சேல்ஸ்.

அது சரி... புத்தகத்தை எழுதிய லின் ஸ்பியர்ஸ் யாரென்று சொல்லலையே...

அவர்தான் பிரிட்னியைப் பெற்ற அம்மா!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X