உலகின் 'கூல்' பிரபலமாக கார்லா ப்ரூனி தேர்வு

40 வயதாகும் கார்லா இத்தாலியைச் சேர்ந்த முன்னாள் சூப்பர் மாடல். இப்போது பிரெஞ்சு அதிபர் சர்கோஸியின் காதல் மனைவி.
பிரெஞ்சுக்காரர்கள் சர்கோஸியைப் பற்றி பேசுகிறார்களோ இல்லையோ, நிச்சயமாக கார்லாவைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசாமல் அவர்களுக்கு தூக்கம் வருவதில்லை.
அந்த அளவுக்கு கார்லா மேனியா பிரான்ஸிலும், இதர ஐரோப்பிய நாடுகளிலும் அதீத அளவில் பரவிக் கிடக்கிறது.
இந் நிலையில் இங்கிலாந்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் 'கூலான' பிரபலம் யார் என்பதுதான் அந்தக் கருத்துக் கணிப்பின் கேள்வி.
இதில் 22 சதவீதம் பேர் கார்லாதான் கூலான பிரபலம் என கருத்து தெரிவித்துள்ளனர். 2வது இடம் மைக் ஜேக்கருக்கும், 3வது இடம் எரிக் கிளாப்டனுக்கும் கிடைத்துள்ளது. தி டெய்லி டெலிகிராப் இந்த கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
கார்லாவின் செயல்பாடுகள், அவரது குணாதிசியம் ஆகியவற்றை வைத்து அவருக்கு 22 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர்.
40 வயதாகும் கார்லா வெளிப்படையாக பேசக் கூடியவர். 53வயதாகும் சர்கோஸி மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறது என்று சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
அவர் முன்பு நிர்வாண கோலத்தில் கொடுத்திருந்த போஸ் அடங்கிய புகைப்படம் சமீபத்தில் கிறிஸ்டி ஏல மையம் மூலம் 45, 500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
'கூல்'..!


Click it and Unblock the Notifications











