ஜூராசிக் பார்க், ரைசிங் சன் கதாசிரியர் மரணம்

லாஸ் ஏஞ்சலெஸில் அவர் மரணமடைந்ததாக அவரது பி.ஆர்.ஓ. நிறுவனம் தெரிவித்து்து.
இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்தவர் கிரிக்டன். ஈஆர் என்கிற பிரபல டிவி ஷோவை உருவாக்கியவர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிரிக்டனுக்கு வயது 66.
உண்மையில் கிரிக்டன் ஒரு டாக்டர் ஆவார். ஆனால் மருத்துவத்தை விட அறிவியல் கதைகளில் அவருக்கு அதீத ஆர்வம் பிறந்தது.
இந்த ஆர்வம்தான் அவரை ஜூராசிக் பார்க் கதையை எழுத வைத்தது. அவரது படைப்புகளிலேயே சிறந்தது என்ற பெயரையும் ஜூராசிக் பார்க் பெற்றது.
அதேபோல, தி அன்ட்ரோமெடா ஸ்ட்ரெயின்தான் அவரது முதல் அறிவியல் கதைப் படைப்பாகும்.
கிரிக்டனின் சில அறிவியல் கருத்துக்கள் பல சர்ச்சைகளையும் எழுப்பியவையாகும்.
உலக வெப்பமயமாதல் குறித்த தீவிரப் பிரசாரத்திலும் கிரிக்டன் ஈடுபட்டிருந்தார். அதை வைத்து 2004ம் ஆண்டு ஸ்டேட் ஆப் பியர் என்ற நூலையும் படைத்தார். இந்த நூலும் கூட அறிவியலாளர்களின் விமர்சனங்களை ஈர்த்தது.
வெஸ்ட்வேர்ல்ட், கோமா, லுக்கர், ரன்அவே ஆகியவை கிரிக்டன் இயக்கிய படங்களில் சில.


Click it and Unblock the Notifications











