டைவர்ஸ் இல்லை- டாம் க்ரூயி்ஸ்

அமெரிக்காவின் பிரபல டிவி ஷோவான ஓபரா வின்ஃப்ரே ஷோவில் கலந்து கொண்ட டாம் க்ரூயி்ஸிடம் அவரது திருமண வாழ்க்கை குறித்து சமீப காலமாக வரும் செயதிகள் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த க்ரூயி்ஸ், நானும் என் மனைவி கேதே ஹோம்ஸும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்குடன் ஒரே வீட்டில் ஒரே படுக்கையில்தான் வசித்து வருகிறோம். போதுமா... என்றார் சிரித்தபடி.
எனக்கும் என் மனைவிக்கும் உள்ள உறவின் நெருக்கத்தை ஒரு கட்டுரையாக எழுதவோ, இதுபோன்ற ஷோவில் சொல்லி நாடகமாக்கவோ நான் விரும்பவில்லை. எங்கள் உறவின் மகத்துவத்தை நான் உணர்ந்திருக்கிறேன், அதுபோதும்.. என்றார் க்ரூயி்ஸ்.
சிலர் நான் ஹோம்ஸை டைவர்ஸ் செய்யப்போவதாக கூறுவதில் எந்த உண்மையுமில்லை. இப்போதைக்கு அப்படியொரு எண்ணமே இல்லை என்றார் அவர்.
பொதுவாக இம்மாதிரி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதைத் தவிர்ப்பவர் டாம். ஆனால் அவருக்கு திருப்புமுனைத் தந்த ரிஸ்கி பிஸினஸ் படம் வெயாகி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி நடைபெறும் ஷோ இது என்பதால் க்ரூயி்ஸ் ஒப்புக் கொண்டாராம்.
டாம் க்ரூயி்சின் கொலராடோ ராக்கி பனிமலை மேன்ஷனிலிருந்து இந்த ஷோ லைவாக ஒளிபரப்பப்பட்டது.
வின்ஃப்ரே இந்நிகழ்ச்சிக்காக வந்தபோது, பங்களா முகப்பில் நின்றபடி டாம் க்ரூயிஸும், கேதே ஹோம்ஸும் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.


Click it and Unblock the Notifications











