மறைந்தார் 'பென் ஹர்' நாயகன்!

By Staff

Charlton Heston
மோசஸ், மைக்கேலேஞ்சலோ, ஆண்ட்ரூ ஜாக்சன் உள்ளிட்டோரின் கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவரான ஹாலிவுட் நடிகர் சார்ல்டன் ஹஸ்டன் மரணமடைந்தார்.

பென்ஹர், தி டென் கமான்ட்மென்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நாயகன்தான் சார்ல்டன். ஆஸ்கர் விருது பெற்றவரான சார்ல்டன், வெளியான தி டென் கமான்ட்மென்ட்ஸ் படத்தில் மோசஸ் கேரக்டரில் நடித்து பெரும் பிரபலமானார்.

1959ம் ஆண்டு வெளியாகி உலகையே கலக்கிய பென்ஹர் படத்தின் நாயகனாகவும் நடித்து அசத்தினார் சார்ல்டன். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

பின்னாளில் நடிப்பைக் குறைத்துக் கொண்டு வேறு பல வேலைகளில் கவனம் செலுத்தியதால் நடிப்பிலிருந்து விலகி விட்டார் சார்ல்டன்.

84 வயதாகும் சார்ல்டன், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் 1923ம் ஆண்டு பிறந்தார். 1944ம் ஆண்டு லிடியா கிளார்க்கை மணந்தார். சட்டென்று மணந்து, பட்டென்று பிரியும் ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில் சார்ல்டனும், லிடியாவும் நீண்ட காலம் வாழ்ந்து சாதனை படைத்தவர்கள். கிட்டத்தட்ட 64 ஆண்டுகளாக இந்த திருமண வாழ்க்கை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்போடு அரசியலிலும் ஈடுபட்டவர் சார்ல்டன். மார்ட்டின் லூதர் கிங்கோடு இணைந்து சிவில் உரிமைகளுக்காகப் போராடியுள்ளார்.

அல்ஸீமர் நோயால் மரணமடைந்த சார்ல்டனுக்கு மனைவி லிடியா, மகன், மகள், 3 பேரக் குழந்தைகள் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X