போர் நீதிமன்றத்தில் சாட்சியம் சொன்ன நவோமி கேம்பல்!

லைபீரியா நாட்டின் அதிபராக இருந்த சார்லஸ் டெய்லர் மீதான போர்க் குற்ற வழக்கு, ஐ.நா.விசேஷ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1997-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா அளித்த விருந்தின் போது, சூப்பர் மாடல் நவோமி கேம்பலுக்கு சார்லஸ் டெய்லர் ப்ளட் டயமண்ட் எனப்படும் காஸ்ட்லி வைரம் பரிசளித்தார் என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
எனவே, இதுபற்றி சாட்சியம் அளிக்க நவோமி கேம்பலுக்கு சம்மன் அனுப்பினர். இதை ஏற்று, நவோமி கேம்பல் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். தனக்கு வைரக்கற்கள் அடங்கிய பை பரிசளிக்கப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால் அதை அளித்தது யார் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
Comments
சாட்சியம் நவோமி கேம்பல் போர் நீதிமன்றம் லைபீரிய அதிபர் வைரம் பரிசு blood diamond liberia president naomi campbell war court


Click it and Unblock the Notifications