'பயமுறுத்திய' சல்மா ஹேய்க்!

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த நடிகை சல்மா ஹேயக், கிளாமருக்கு பெயர் போனவர். திரைப்படம், நாடகம், டிவி ஷோ என எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் படு கவர்ச்சிகரமாகத்தான் வருவார்.
முன்பு தனது பிறந்தநாளின்போது அதையொட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிறந்த மேனியுடன் திடீரென தோன்றி அனைவரையும் அதிர வைத்தவர் சல்மா. கேட்டால், இதுதான் நான் பிறந்தபோது அணிந்திருந்த உடை என்று கூறி அனைவரையும் அதிரடித்தார்.
இந்த நிலையில் ஜெர்மனியின் நூரம்பர்க் நகரில் நடந்த வெட்டன்டாஸ் என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த சல்மா, வழக்கம் போல தனது கவர்ச்சியால அனைவரையும் அதிரடித்தார்.
டெட்டனுவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பிரசாரத்தில் ஹேயக் ஈடுபட்டுள்ளார். இதை பிரபலப்படுத்துவதற்காக ஜெர்மன் டிவி ஷோவான வெட்டன்டாஸில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு, பாரம்பரிய பவேரியன் ஸ்டைல் உடையில் படு கவர்ச்சியாக வந்திருந்தார். ஒரு கட்டத்தில் உடை அவிழ்ந்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு படு அபாயகரமாக காணப்பட்டார் சல்மா.
நிகழ்ச்சியைப் பார்த்த அனைவரும் சல்மா இந்த உடையில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்ததாக கூறியுள்ளனர்.
மேலும், டிவி ஷோவில் கலந்து கொண்டவர்களும் கூட சல்மாவின் டிரஸ்ஸைப் பார்த்து நெளிந்து போய் விட்டனராம்.


Click it and Unblock the Notifications











