குப்பைத் தொட்டியில் வைத்து எரிக்கப்பட்ட பிளேபாய் மாடல்!

2003ம் ஆண்டு புகழ்பெற்ற ப்ளேபாய் வீடியோவில் இடம்பெற்ற மாடல் அழகி பௌலா. சில தினங்களுக்கு முன் விடுமுறைக்காக தனது நண்பருடன் ப்ளோரிடாவுக்கு வந்தார்.
பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மியாமி இரவு விடுதியில் கடைசியாக அவரைப் பார்த்துள்ளனர். அதன் பிறகு அவரைக் காணவில்லை என பௌலாவின் நண்பர் புகார் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பௌலாவின் உடமைகள் கண்டெடுக்கப்பட்டன. அன்றுதான், மியாமி தெருவில் சந்தேகத்துக்கிடமாக எரிந்து கொண்டிருந்த ஒரு குப்பைத் தொட்டியை கிளறியபோது அதில் எரிந்த நிலையில் ஒரு பெண் இருப்பதைப் பார்த்து தகவல் தெரிவித்துள்ளார் ஒருவர்.
உடனடியாக அங்கு போன போலீஸார் குப்பைத் தொட்டியில் எரிந்து கிடந்தவர் பௌலா என கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கொடூரமான கொலைக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.
Comments


Click it and Unblock the Notifications