நிறைய குழந்தைகள் வேண்டும்..பிரிட்னி

By Staff

Britney
மீண்டும் திருமணம் செய்து நிறையக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, யாருமே அண்ட முடியாத ஒரு ஏகாந்தமான இடத்தில் கணவர், குழந்தைகளுடன் வாழ ஆசையாக உள்ளது என்று ஏக்கத்துடன் கூறுகிறார் பாப் இளவரசி பிரிட்னி ஸ்பியர்ஸ்.

கணவரை விட்டுப் பிரிந்து விட்டார் பிரிட்னி. அவரது இரு மகன்களான ஜெய்டன் ஜேம்ஸ் மற்றும் சீன் பிரெட்சனை வளர்க்கும் உரிமையையும் அவர் கணவரிடம் இழந்து விட்டார்.

இதனால் விரக்தியில் இருந்து வந்த பிரிட்னி தற்போது அதிலிருந்து மீண்டு புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் திருமணம் செய்யும் ஆசை பிரிட்னிக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மீண்டும் எனக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என விரும்புகிறேன். நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கூடவே யாருமே வர முடியாத ஒரு தீவில் கணவர், குழந்தைகளுடன் ஜாலியாக இருக்க வேண்டும்.

அதுதான் எனக்கு சொர்க்கம். எனது குழந்தைகள் என்னுடன் இருக்க வேண்டும். எனக்கே எனக்கான எனது கணவர், குழந்தைகளைத் தவிர வேறு யார் முகத்தையும் நான் பார்க்க கூடாது.

என்னை முழுமையாக நேசிக்கும் ஒருவருக்காக என்னை முழுமையாக கொடுக்க தயாராகி விட்டேன். என்னைச் சுற்றியே அவர் வலம் வர வேண்டும். அதுதான் எனக்கு உலகிலேயே மிக சந்தோஷமான விஷயமாக இருக்கும்.

அடுத்த வருடமே எனக்கு திருமணம் நடக்கும் என நம்புகிறேன். பிறகென்ன குழந்தைகளைப் பெற்றுத் தள்ள வேண்டியதுதான் என்கிறார் ஜாலி சிரிப்புடன் பிரிட்னி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X