இந்து மதத்தை தழுவினார் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைக் கொள்ளைக் கொண்டவர் 43 வயதாகும் ஜூலியா. இவர் ஆஸ்கர் விருது பெற்ற நடிகை ஆவார். இவரின் அடுத்த படமான 'ஈட், ப்ரே அன்ட் லவ்' இன் படபிடிப்பு கடந்த ஆண்டு நடந்தது.
இதன் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பட்டோடியில் உள்ள ஹரி மந்திர் அருகில் நடந்தது. இது குறித்து சுவாமி தரம்தேவ் கூறியதாவது,
ஒருவர் தன் மனதார இந்துத்துவத்தை ஏற்றுள்ளார் என்பது நல்ல விஷயம். படபிடிப்பிற்காக ஹரி மந்திர் மாதிரி செட் அமைக்கப்பட்டது. அதில் படக்குழுவினர்கள் அனைவரும் விளக்கேற்றினர். ஜூலியா அங்கு பிரார்த்தனை செய்தார். தனது 3 குழந்தைகளையும் அழைத்து வந்தார். அவர்கள் கையில் புனித கயிற்றை கட்டி, நெற்றியில் திலகமிட்டேன்.
அவர் தனது உதவியாளர் மூலம் தனது சுகமில்லாத அன்னைக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் இங்கிருந்து செல்லும் முன் சாப்பிட, காதலிக்க மறந்தாலும் பிரார்த்தனை செய்ய மறக்கக் கூடாது என்றேன். படத்தை தவிர்த்து நிஜத்திலும் பக்தியுடன் இருக்கும்படி கூறினேன். அவரும் சிரித்துக் கொண்டே சரி என்றார்.
இந்த படப்பிடிப்பு சமயத்தில்தான் ஜூலியா இந்து மத கோட்பாடுகளை தழுவினாராம்.
ஜூலியா இந்து மதத்திற்கு மாறியது இணையதளத்தில் பரபரப்பான செய்தியாக உள்ளது. சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











