சீர்திருத்த வகுப்புக்குப் போகாமல் டிமிக்கி அடித்த லின்ட்சே லோகனுக்கு சிறை

கடந்த 2007ம் ஆண்டு குடித்து விட்டு காரை ஓட்டிச் சென்றார் லின்ட்சே லோகன். இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட் ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், சீர்திருத்த வகுப்புக்கு அவர் போக வேண்டு்ம் எனவும் உத்தரவிட்டது.
ஆனால் இந்த வகுப்புக்களுக்குப் போகாமல் மட்டம் போட்டு விட்டார் லின்ட்சே. இதையடுத்து அவருக்கு லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட் 3 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதைக் கேட்டு வாய் விட்டு அழுதார் லின்ட்சே. நான் வேண்டும் என்றே செய்யவில்லை. அந்த சமயம் நான் மொராக்கோ நாட்டில் இருந்தேன். அதனால்தான் வர முடியவில்லை. மன்னிக்க வேண்டும். சிறைத் தண்டனை வேண்டாம் என்றார். ஆனால் நீதிபதி கேட்கவில்லை. தண்டனை விதித்தது விதித்ததுதான் என்று கூறிவிட்டார்.
Comments
actress lindsey lohan குடிபோதையில் டிரைவிங் சிறைத் தண்டனை நடிகை லின்ட்சே லோஹன் ஹாலிவுட் drunkan driving hollywood imprisonment


Click it and Unblock the Notifications