ஆப்பிரிக்காவில் செட்டிலாக விரும்பும் ஏஞ்சலினா ஜூலி: நடிப்பதைக் குறைக்கிறார்

By Sudha

Angelina Jolie with Kids
பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜூலி ஆப்பிரிக்காவில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஏஞ்சலினா ஜூலி பிராட் பிட்டுடனும், தனது 6 குழந்தைகளுடனும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்போது தனது குழந்தைகள் ஒவ்வொருடனும் தனித் தனியே நேரம் செலவிட விரும்புவதாக ஏக்கம் தெரிவித்துள்ளார் ஜூலி.

அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது அவர்கள் ஜூலியின் எதிர்கால திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஜூலி கூறியதாவது,

இனி என் வேலை பளுவை குறைக்க விரும்புகிறேன். அதற்காக நான் திரையுலகில் இருந்து ஒரேயேடியாக விலகப்போவதில்லை. இனி குறைந்த அளவு படங்களையே ஒப்புக் கொள்வேன். எனது குழந்தைகள் மற்றும் பிட்டுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். அதற்காகத் தான் இந்த முடிவு.

எதிர்காலத்தில் ஆப்பிரிக்காவில் குடியேறி மகிழ்ச்சியாக வாழ ஆசையாக இருக்கிறது. விமானத்தில் பயணிப்பதிலேயே எனது பொழுதை கழிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X