இந்தியக் குழந்தைக்கு மடோனா குறி?

பாப் அழகி மடோனாவுக்கும், அவரது கணவர் கய் ரிச்சிக்கும் மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் டேவிட் பாண்டா என்ற குழந்தையை கடந்த 2006ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டிலிருந்து தத்தெடுத்தார் மடோனா.
இதையடுத்து மேலும் ஒரு ஆப்பிரிக்க குழந்தையை தத்தெடுக்க தீர்மானித்திருந்தார் மடோனா. ஆனால் மலாவி குழந்தையை தத்தெடுத்தபோதே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் மடோனா.
தனது செல்வாக்கைப் பயன்படுத்தி விதிமுறைகளை புறந்தள்ளி மடோனா டேவிட்டை தத்தெடுத்ததாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து தனது 2வது ஆப்பிரிக்க தத்தெடுப்பு முயற்சியை இப்போது மடோனா கைவிட்டு விட்டார். அதற்குப் பதிலாக அவரது கவனம் இப்போது இந்தியா பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியப் பெண் குழந்தை ஒருவரை தத்தெடுக்க மடோனா தீர்மானித்துள்ளாராம். இதுதொடர்பாக லண்டனைச் சேர்ந்த தனது நண்பரும், பாலிவுட் நடன இயக்குநருமான சந்தீப் சொபர்க்கருடன் விவாதித்துள்ளாராம் மடோனா.
சமீபத்தில் கய் ரிச்சியுடன், மடோனா இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். அதன் பின்னர்தான் அவருக்கு இந்தியக் குழந்தையை தத்தெடுக்கும் எண்ணம் வந்ததாம். முதலில் இதை கய் ஏற்றுக் கொள்ளவில்லை. எதற்கு இன்னொரு தத்துக் குழந்தை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அவரை பேசி சமாதானப்படுத்தி விட்டாராம் மடோனா.
தற்போது ஹார்ட் கேன்டி என்ற ஆல்பத்தில் பிசியாக உள்ளார் மடோனா. அதை முடித்த பின்னர் அவர் இந்தியாவுக்கு வருவார், இந்தியக் குழந்தையை தத்தெடுக்கும் வேலையில் இறங்குவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











